ரமழானே

எங்கள் பாவங்களை சுட்டெரிக்க வந்த ரமழானே! பொல்லாத நோயான கொரோனாவை இல்லாமல் ஒழித்திட வல்லவன் அல்லாவிடம் மன்றாடிடு எமக்கா

அருளாளன் அளவற்ற அன்புடையோன் நிகரற்ற அல்லாஹ்வே! புனித ரமழானின் பொருட்டாளே எம்மை காத்தருள்வாய் நாயனே!

இதயத்தில் பாரம் இமயத்தின் உயரம் கூட்டான அமல்களெல்லாம் அடைபட்டு போச்சு பாவிகள் எங்களை மன்னித்திடு ரஹ்மானே!

பூட்டோடு பள்ளி வீட்டோடு நாங்கள் சாட்டோடு சாட்டாக நரகிற்கு ஆகின்றோம் கொள்ளி.

நாச்சியாதீவு எம் . சஹ்ரின் அஹமட்

கருத்துகள்