சுட்டெரிக்கும் சுடர் நாட்களில் சுவன சுகம் தேட அருள் மிகு மாதம் - ரமழான்.
பொறுமை எனும் பொக்கிஷத்தை புதைத்து வைக்காமல் புன்னகைக்கும் மாதம் - ரமழான்.
கண் கலங்கி காகிதம் நனைய கஸ்தூரித் திருமறையை ஓதும் மாதம் - ரமழான்.
உணவில்லா உறவினர்களுக்கு உரம் கொடுத்து உதவும் மாதம் - ரமழான்
பத்தென்று எண்ணி பன்மடங்கு ரஹ்மத்தை பெற்றெடுக்கும் மதம் - ரமழான்.
உலகமெல்லாம் சிற்றென்று சிதறிக்கிடக்கும் உயிர்க்கொல்லிக் காவிய நம் கரம் ஏந்தி வழி அனுப்ப சந்தர்ப்பமாய் இருக்கும் மாதம் - ரமழான்.
பல்லாண்டு பகைமையினை பழி சுமக்காமல் பாசத்தோடு கட்டியணைக்க வைக்கும் மாதம் - ரமழான்.
கருத்துகள்
கருத்துரையிடுக