எது வரையறை ?? எதற்கு வரையறை ??
பத்தொடு ஒன்றென பண்ணிவைத்த பாவத்திற்கு பரிகாரம் ஒருமாதமென பரிகாசம் செய்வதெனோ...
முப்பது நாட்கள் மட்டும் முன்ணுதாரன புருஷனாகி மூன்று பத்துக்களோடு முடிந்து போவதல்ல நல்லமல்..
மாற்றம் வேண்டி மன்றாடி மனதினை புனிதமாக்கி மண்ணரைக்கு பொதிசெய்திட மகத்தானவன் விதித்த ஒன்று...
அருள்களை சுமந்து அவனியினை மறந்து ஆன்மிகத்தில் திலைத்து ஆயுளை மாற்றியமைக்கும்..
பூரணத்துவத்திற்காய் பூர்வீக இருப்பிடத்திற்காய் புண்ணியம் தேடும் பொக்கிஷம் சுமந்த ஒன்று...
உணவுக்கு வரையறை உறக்கத்துக்கு வரையறை இச்சைக்கு வரையறை இருப்பதற்கெல்லாம் வரையறை..
ஏழைப் பசியரிய எல்லையற்ற நன்மையடைய ஏகனவன் திருப்பியடைய என்றென்றும் சுவனம் நுழைய...
கஷ்டப் படுத்தவில்லை கட்டுப்பாடுகள் விதிக்கின்றது கட்டுப்பட்டிட முடியாதவர்களுக்கு சலுகைகள் அளிக்கின்றது...
நோன்பின் மாண்பு பசியோ தகமோ அல்ல பயிற்சிப் பாசறை பயிற்றுவிப்பவன் இறைவனவன்...
அள்ளி இறைக்கப்படுகிது நாமேன் கிள்ளி எடுக்கவேண்டும் இரட்டித்து மடங்குகளாகிறது இன்னுமேன் தாமதிக்க வேண்டும்...
கருத்துகள்
கருத்துரையிடுக