வாழ்க்கை பற்றிய ஒரு உண்மை. பகுதி 02

"நபி ஸல் அவர்கள் கூறினார்கள் இறைவா!! நிம்மதியான வாழ்வை உன்னிடம் நான் கேட்கிறேன்." ( திர்மிதி)

'எவ்வளவு தான் ஆடம்பரமாக வாழ்ந்தாலும் நிம்மதி இல்லாவிடின் அந்த வாழ்க்கை நரகமாக தான் இருக்கும்.' 'தனிமனித வாழ்க்கை ,குடும்ப வாழ்க்கை, அதே போல் சமூகமாக வாழ்ந்தாலும் நிம்மதி அவசியம்.'

"எனவே' எமது வாழ்க்கை யில் நிம்மதியை பெறுவதற்காக நாம் செய்ய வேண்டிய விடயங்களில் முதலாவது

இறைவனுக்காக வாழ்தல்

"எமது வாழ்க்கையை இறை திருப்தியைப்பெற்றுக்கொள்ளும் வண்ணம் அமைத்துக்கொள்ளல்." குடும்பம், பணம், புகழ், பதவி எதுவாக இருந்தாலும் இறைவழியில் பயன்பட வேண்டும். 'திருமணம் முடியுங்கள், இல்லறத்தை அனுபவியுங்கள், மனைவி பிள்ளைகளுடன் வாழ்க்கையை ரசியுங்கள்.

அதேபோல் இறைவனுக்காக வாழும், வணங்கும் ஒரு குடும்பத்தை உருவாக்க வேண்டும். இல்லாவிடின் அந்த வாழ்க்கை அர்த்தமற்றதாக மாறிவிடும்.

'கல்வி கற்று பெறும் சாதனையாளராக மாறுங்கள். என்றாலும் அதன் மூலம் இறைவனுக்காக என்ற தூய்மையான எண்ணத்துடன் மனித சமூகத்திற்கு எவ்வகையிலாவது பயனாற்ற வேண்டும். அது இல்லாமல் எத்தனை கண்டுபிடிப்புக்கள், புகழ் பெற்றாலும் அல்லாஹ்விடத்தில் எந்தப்பெறுமானமும் இல்லை.

'சொத்து செல்வங்கள் சம்பாதித்து வசதிவாய்ப்புக்களுடன் பெறும் தொழிலதிபராக ஆகுங்கள். அதேபோல் தேவைப்படுவோருக்கு உதவி செய்யும், ஸதகா, ஸகாத் கொடுக்கும் கொடைவள்ளனாக இறைவனுக்காக செயற்படுங்கள்.

இதுவே இம்மையில் நிம்மதியையும் வெற்றியையும் தந்து மறுமையிலும் வெற்றியடையச்செய்யும். எனவே அனைத்து செயல்களையும் இறைவனுக்காக செய்வோம் எனின் நிம்மதி எங்களை நோக்கி வரும்.

"நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய அறுப்பு குர்பானியும், என் வாழ்வும், மரணமும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும்.. " (அன்ஆம் :162)

தொடரும்… Faslan hashim SEUSL BA ®
Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media

கருத்துகள்