பள்ளிவாசல்

எனக்கு மன அமைதிக்கு மஸ்ஜிதுகள் தான்

திருப்தியின் திரு வாசல் தினமும் பள்ளிவாசல்கள் தான்

அங்கு சென்றால் தான் அமைதி மலரும்

பூமித்தாயின் மடியில் பள்ளிவாசல்கள் தான் சுவனமென்றும்

இரண்டு ரக்அத்துக்களில் உள்ளம் சாந்தமடையும்

இன்றே போகமுடியவில்லை கனத்த உள்ளமும் குறையவில்லை

ஏங்குகிறேன் அந்த மாளிகையில் இரண்டு ரக்அத்துக்கள் எப்போது கிடைக்குமென

இறக்குவானை அஸ்கர்

கருத்துகள்