அன்னைக்கோர் மடல்

பத்து மாதம் எனை கருவிற் சுமந்தாய் உன்னிரத்தம் பாலாக்கி என் பசி தீர்த்தாய் இரவெல்லாம் எனக்காய் துயில் நீத்தாய்

எனை சீராட்டினாய் பாராட்டினாய் அறிவையும் பரிவோடு கலந்தூட்டினாய் வண்ண வண்ணமாய் ஆடை அணிவித்து எனை அழகு பார்த்தாய்

நாளும் என்னுயரமளந்து-நீ இன்ப அதிர்ச்சி கொண்டாய் பதின்ம வயதில் நான் பெற்ற புதின வெற்றிகளை உனதாய் எண்ணி உச்சிகுளிர்ந்தாய் ஊரே திரும்பிப் பார்க்குமளவு புகழாரம் சூடினாய் "என் மகள்" என்று

அம்மா! நீ அடிக்கடி கூறும் "நிமிர்ந்து நில், உண்மையேஉரை, அச்சத்தை துச்சமென நினை, தோல்வியே நிச்சயமென்றாலும் பின்வாங்காதே" என்ற உன் அறிவுரைகள் தானம்மா, இன்று எனை உயர்த்திய தாரக மந்திரங்கள்.

அம்மா! மறுஜென்மமென்றிருந்தால் நீ தான் வேண்டுமம்மா என் மகளாக.

அஷ்fபா உவைஸ்

கருத்துகள்