எமது தூசு படிந்த வாழ்க்கைப் புத்தகத்தின் தூசியை தட்டப் போவதும் நீ தான்!
இது வரை எழுதப்படாத எமது நாட்குறிப்பில் நேர அட்டவணையை நிர்ணயிக்கப் போவதும் நீ தான்!
சிறைப்பட்டுக் கிடக்கும் எமது உலக மோகங்களுக்கு விடுதலை தரப் போவதும் நீ தான்!
கறைபடிந்த எமது இதயங்களை சலவை செய்யப் போவதும் நீ தான்!
திசை மாறிய எமது வாழ்க்கைப் பயணங்களை சீர்த்திருத்த வந்த ஆசானும் நீ தான்!
நன்மைகக்கான வெகுமதியை அருள் மழையாய் பொழியச் செய்வதும் நீ தான்!
உன் அருள் மழையில் நனைந்து கொண்டிருக்கும் ஜீவன் நாம் தான்!
உன்னால் எமது உயிருக்குள் ஓர் புத்துணர்ச்சி எமது இதழ்களில் என்றும் புது மகிழ்ச்சி!
ரமழானே! நீ தான் ஒளி! எங்கள் வாழ்வின் ஒளி! எங்கள் பாவத்தின் கறை போக்கும் உந்தன் வழி! அது தௌபாவின் வழி!
ரமழானே நீயும் எம்மை காண வந்தாய் உன்னை கண்டதாலே எங்கள் கனவும் நனவானதே.
ரமழான் உன்னிடம் தான் பல புதையல்கள் இருக்கிறதா? அந்த புதையலை தேடி நாம் பல மாதங்கள் காத்திருந்தோம்.
ஷைத்தான் விலங்கிட்டு சுவன வாயில் திறந்திடும் அருள் பொழிந்திடுதே.
பத்ர் போரும் நடந்து லைலத்துல் கத்ரில் முழு குர்ஆன் இறங்க தொழுகையையும் ஸகாத்தையும் உயிரூட்டினாய்.
ரமழான் உன்னால் தான் தக்வாவும் கூடியதே. ஏழையின் பசியை உணரத் தூண்டியதே.
வெற்றி நீ என்றால் வரும் பாதை நாமாகிறோம் ரய்யான் சுவனத்திலே!
கருத்துகள்
கருத்துரையிடுக