உம்மாவின் நினைவுகள்

ஆராத காயங்கள் தீராத சோகங்கள் நீங்காத நினைவுகள் உம்மா

மௌத்து ஒவ்வொரு ஆத்மாவும் சுவைத்தே தீரும் உண்மை அறிந்தும் நெஞ்சம் உங்கள் பிரிவின் துயரங்களை மறக்க மறுக்குதே

ரமழான் தலைபிறை பார்த்துமே தலைநோன்பு பிடிக்கவா என்பீங்க புதுச்சாரம் தச்சிவைச்சி முன் வரிசையில தாராவீகு தொழச்சொல்லி நீங்களும் முழுமையாக தொழுதீங்க

முப்பது ஜூசு ஓதி முழுசா முடிப்பீங்க தஹஜ்ஜது தொழுது விட்டு சுடச்சுட சஹர் சமைச்சி தந்திங்க

பெருநாள் பிறைபார்கமுன்னே பலகாரம் தின்பண்டங்கள் கையாள உடுப்பு தைச்சி தங்கச்சிகள அழகுபாப்பீங்க

இப்ப எல்லாம் எங்கள் நினைவுகளில் அலை மோத கண்ணீருடன் இருகரம் ஏந்துகின்றேன்

யா அல்லாஹ் என் தாயின் மண்ணறையை சுவனத்துப் பூஞ்சோலைகளாக ஆக்குவாயாக. பிழை பொருத்தருள்வாயக.

நாச்சியாதீவு எம். சஹ்ரின் அஹமட்

கருத்துகள்