என் பாசமிகு தந்தை

அவளோ என்னை பத்து மாதம் வயிற்றில் சுமந்தாள் - ஆனால் நீயோ என்னை பல்லாண்டு காலம் தோளில் சுமந்தாய்.

பத்து மாதம் எனக்கு கருவறையில் உணவூட்டியவள் தாய் - ஆனால் அந்தப்பத்து மாதமும் என் தாய்க்கு உணவூட்டியவண் நீ.

பெற்றெடுக்கும் போது என் பிள்ளைக்கு ஒன்றும் ஆகி விடக்கூடாது என்று நினைப்பவள் தாய் - ஆனால் வெளியே நின்று கொண்டு என் மனைவி,பிள்ளை இருவருக்கும் ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்று கண்ணீர் சிந்துபவன் நீ

சிலகாலம் பாலூட்டி வளர்த்தவள் தாய் ஆனால் என்னை பலகாலம் வியர்வை சிந்தி வளர்த்தவன் நீ

மொத்தத்தில் தாயின் பாசமோ தோசை வாயில் வைத்தவுடன் ருசி புரியும் ஆனால் உன் பாசமோ தோசைக் கல் நான் தந்தையாகிய பின்னரே அது எனக்கு புரியும்.

எனக்குப் பாடம் சொல்லித் தருவதோ தாய் ஆனால் என் பாடமாகவே இருப்பது நீ

மொத்தத்தில் நீ தான் என் ரியல் ஹீரோ என் பாசமிகு தந்தையே

Fasool Muhammadh Fasroon உடநிதிகம,கெக்கிராவ

கருத்துகள்