இந்த புனித ரமழான் உடைய மாதத்தில் நன்மைக்கு முந்திக் கொள்வோம். ஈமானை கூட்டிக் கொள்வோம்.
சண்டை சச்சரவுகள் மனஸ்தாபங்களை தள்ளி வைப்போம். மனிதன் தவறு செய்யக் கூடியவன் என்ற வகையில் தவறுகளை மன்னித்து அவற்றை மறக்க கற்றுக் கொள்வோம். அடுத்தவர் உணர்வுகளையும் மதித்து நடப்போம்.
முஸ்லிம் என்ற போர்வைக்குள் நாம் எல்லோரும் சகோதரர்களே. எனவே வேண்டாம் இனியும் நமக்குள் பிரிவுகள். வேண்டும் எமக்குள் நல்ல உறவுகள். மனித மனங்களில் அன்பை விதைத்து பிராத்தனைகளை இலவசமாக பெற்றுக் கொள்வோம்.
இந்த அற்ப உலகுக்காக நாம் யாரையும் காயப்படுத்தி அதில் குளிர் காயவும் வேண்டாம். நமக்கான காயங்களும் வேண்டாம். வா நண்பா! நம் விரல்களை ஒன்று சேர்த்து வெற்றி காண ஓடி வா!
கருத்துகள்
கருத்துரையிடுக