கண்ணியம்மிகு ரமழானே

புகழ் பூக்கும் ரமழானே உன் புதுவரவுக்காக இல்லங்களில் காத்திருந்தோம்

அல்லாஹ்வின் அருட்கொடைகளை அள்ளிச் சொரியும் உன்னை வரவேற்று மகிழ்ந்தோம்.

ஈரைந்து நாட்களில் ரஹ்மத்தை வழங்கி ஐயிரன்டு பத்தில் பாவக்கரைகள் போக்கி மூன்றாம் பத்தில் வெந்தனலி நெருப்பிலிருந்து பாதுகாத்திட

இருகரம் ஏந்தி இரவு பகலாய் இறைதியானத்தில் திளைத்து வஹியின் வசனங்களை அனுதினமும் பாராயணித்து இறைபொருத்தம் அடைய மாண்புமிகு ரமழானே உன்னில் முயற்சிக்கிறோம்.

Mumthaj – Yoosuff Akurana

கருத்துகள்