ரமழான் 25ன் இன்றைய விடியலில் இதயப் பெருமழை சோவெனப் பொழிகிறது இயற்கை இடியின் மொழியில்
எம் உணர்வுகள் சுமந்த இதயப் பெருமகன் நளீமியா வாழ்வின் மணக்கும் நறுமணம் அருமை ஆசான் சுவனமேகிய செய்தி சொல்கிறது.
அறிவின் ஆய்வின் வாசல் எமக்கு திறந்து காட்டிய கலங்கரை விளக்கே நீங்கள் இன்று அணைந்து விட்டாலும் எஙகள் இதயங்களில் வல்லவன் ரஹ்மானின் அருளின் ஒளியில் நிச்சியம் ஒளிர்வீர்கள்.
BMICHல் உங்கள் வாழ்துரை நிகழ்வில் வழங்கிய என் கவிதை வரிகளை காணும் போதெல்லாம் நினைவு படுத்துவீர்கள் இஸ்லாமிய சிந்தனைக்கு ஆக்கம் எழுதவில்லை என்றால் ஏன் என்று கேட்பீர்கள். இந்த ஏழைச் சிறுவனுக்கு ஆய்வின் உலகை உங்கள் விழிகளால் திறந்து காட்டினீர்கள்.
நளீமியாவின் நந்தவன நினைவுகளில் எங்கள் அறிவுத் தந்தைக்கு அப்பால் இன்றும் இருப்பது உங்கள் நினைவுகள்தான்.
என் அருமை ஆசானே விழிகள் மூடி அமைதியாய் அழுகிறேன் உங்கள் முகத்தை இறுதியாய் ஒரு முறை பார்க்க முடியாமல் போன அவலத்தை எண்ணி என் தஹஜ்ஜுத் முசல்லாவின் காயாத ஈரத்தில் இனி எப்போதும் இருப்பீர்கள். விடை தருகிறோம் சுவனத்து கதவுகள் உங்களுக்காய் திறந்தே இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக