கொரோனாவே! இது உன்னால் தான்! பல மாதங்களாக காத்திருந்தேன் பல்கலைக்கழக பதிவுக்காக.
ஆனால் அது இன்று எட்டியும் எட்டாத தூரத்தில்!
பல கனவுகளை சுமந்து பல அவமானங்களை கடந்து பல தோல்விகளை தாங்கி பல தடைகளை தாண்டி காத்திருந்தேன். எனது இலட்சிய பயணத்திற்காக!
ஆனால் இன்னும் அந்த பயணம் தரிப்பிடத்தில். எத்தனையோ உயிர்களை நீ காவு கொண்டு விட்டாய். நீ காவு கொண்டது அந்த உயிர்களை மட்டும் அல்ல அதன் கனவுகளையும் தான். அது போல் எனது கனவுகளை கலைத்து விடுவாயோ?
மரணம் என்றாவது ஒருநாள் என்னை வந்தடையும் என்பது உண்மை தான். ஆனாலும் நான் வாழ ஆசைப்படுகிறேன் உலக மோகத்திற்காக அல்ல. ஏற்கனவே சிதைக்கப்பட்ட எனது கனவுகளை மீண்டும் உயிர்ப்பித்து எனக்காக வாழ ஆசைப்படுகிறேன்.
எனது பல இலக்குகளை அடைய ஆசைப்படுகிறேன். என்றோ தவிடு பொடியாகிய எனது எதிர்ப்பார்ப்புக்களை மீண்டும் கட்டி எழுப்ப ஆசைப்படுகிறேன்.
எனது கடந்த கால காயங்களுக்கு எதிர்காலத்தால் மருந்திட ஆசைப்படுகிறேன்.
ஈருலகிலும் வெற்றி பெற ஆசைப்படுகிறேன். வேண்டாம் கொரோனாவே. நீ போய் விடு!
கருத்துகள்
கருத்துரையிடுக