கண்டங்கள் கடந்து வந்தாலும்.. நாடுகள் பல தொட்டு வந்தாலும்.. நினைவுகளுடன் கூட வரும் சுவாசத்துடன் வாசம் தரும் நம் தாய் மண்ணை போல வருமா?
கடல் கடந்த பறவைகள் நாம் தாயகம் செல்லும் தினம் அறியாது கண்ணீர் விடும் குழந்தைகள் நாம்
களிப்போடு கழித்த ரமழான் எங்கே? விழிப்போடு தொழுத தராவீஹ் எங்கே? எம்மை அன்போடு ஏற்ற உறவுகள் எங்கே? அழகாக சுற்றிய பொழுதுகள் எங்கே? மகிழ்வோடு விளையாடிய நட்புகள் எங்கே?
அனைத்தையும் தொலைக்க விட்டு தனிமையில் திகைக்க வைத்த Corona வே சென்று விடு
நாம் சென்றடைய வேண்டும் நம் நாடுகளை காண வேண்டும் நம் வீடுகளை பார்க்க வேண்டும் நம் உறவுகளை மீட்க வேண்டும் நினைவுகளை
சென்று விடு Corona தாயகம் செல்ல வழி விட்டு
கருத்துகள்
கருத்துரையிடுக