தாய்மையே

தாய்மை தீபமேற்றி அன்புச் சுடர் தந்த எந்தன் அன்னையே!

ஈரைந்து மாதங்கள் கருவறைப் பொக்கிஷமாய் என்னைக் கட்டிக் காத்த என்னருமை அன்னை நீ

உன் உதிரத்தை பால் அமுதாய் சுரந்து பாசத்துடன் ஊட்டிய காசினி போற்றும் அன்னை நீ

என் பின்னாலே உலா வந்து நிலா காட்டி நிறை குடமாய் என் வயிறு நிரப்பிய என்னினிய அன்னை நீ

என் வாழ்வு செழிக்க கார்கால மழையாய் பாரினில் திகழ்ந்த என்னினியவர்கள் மிஸ்ரியா மின்ஸார் நளீபா நளீர் என்ற தீபங்களுக்கு என்னுளச் சுனையில் உவகையுடன் ஊற்றெடுத்த அன்னையர் தின வாழ்த்துக்கள்!

Nafees Naleer

கருத்துகள்