நானானவள்-02

விடியல்கள் விழுங்கப்பட்ட நீண்ட இரவுகளில் ஆழ்ந்து கொண்டிருக்க பழகி ஆண்டுகளாகி விட்டது

யாரோ வந்தென்னை துயில் கலைத்து விட வேண்டாம் யாரோ வந்தென்னை தலை கோதிடவும் வேண்டாம்

என் நேசச் சஞ்சரிப்புக்கள் என் ஆழ் மனம் தேடல்களைப் போல முடிவில்லாத ஒரு தொடக்கப் புள்ளியில் நின்று கொண்டிருக்கிறது

என் கறுப்புக் கனவுகளுக்கு கலர் தீட்டியவர்கள் அவர்களாகவே அதை களவாடியும் விட்டார்கள்

இனியுமொரு நாளில் வாழ்க்கையின் எந்தப் பாகங்களிலும் அவர்கள் பொதிந்திருந்ததாய் ஒரு பக்கம் புறட்டப் பட போவதில்லை

நான் நின்ற நிலைக் கண்ணாடியில் அவர்கள் பிம்பம் பதித்துப் போவதெல்லாம் நானான தேசத்தின் தனித்துவத்தில் கல்லெறிவதைப் போல

ஏரூர் நிலாத் தோழி

கருத்துகள்