அக்னியை விழுங்கிய உலகம் ஏப்பம் விட முடியாத துர்பாக்கியத்தில் துடிக்க நிர்வாணப் பேயின் மிகப் பெருந்தோகை சூரியனை மறைக்கிறது
மறுதலிக்கப்பட்ட நாட்களின் புலம்பல் இப்பொதெல்லாம் திண்ணையில் வந்தமர்ந்து பாடும் குயிலின் இனிய கானத்தை மிகைத்து விடுகிறது
உள்ளங்களில் ஊறிப்போன வரையறுக்கப்படாத வன்மம் இன்னும் இன்னும் எத்தனை வருடங்களை விழுங்கி விடுமோ என்ற பேரச்சம் தொடர்கதையாக நீள்கிறது
நாவலில் வாசித்த வேற்று கிரகம் போல வெறுமையை மட்டும் நிரப்பியிருக்கிறது நான் காணும் உலகம்.
கருத்துகள்
கருத்துரையிடுக