தனியாக விழுகிறேன் தனியாக அழுகிறேன் மௌனமாக பேசுகிறேன்
அருகினிலோ தூரத்திலோ யாரும் கண்ணுக்கு பட்டதாய் இல்லை!
ஆனாலும் என் முறைப்பாடுகள் நீள்கிறது ஆறுதல் கிடைக்கிறது மௌன மொழியின் அர்த்தம் புரிகிறது மனதின் பாரம் குறைகிறது
பிராத்தனைகள் என் வலிகளை ஏந்தி நிற்கிறது என் இருப்பிடம் சுஜூது செய்யும் இடமாகிறது எனக்கு அருகிலல்ல! என்னுடனே; என் இறைவன் உள்ளான்!
வார்த்தைகளை இப்போது பத்திரப்படுத்துகிறேன். அடுத்த பிராத்தனையில் ஒப்புவிப்பதற்காய்.
கருத்துகள்
கருத்துரையிடுக