நிழல் விழுந்திட இடம் தேடி வந்தவன் அல்ல நான் என் நிழலாகவே உன்னை இணைந்திட எதிர் பார்த்து நின்றவன் நான் வார்த்தையில் என்னை நீ வதைத்திட்ட போதும் என் வாழ்க்கையில் உன்னை இணைத்திட எதிர் பார்க்கிறது என் காதல்!
மேகங்களைக் கண்டு மோகம் கொண்ட தரையோ தாகம் என்று தண்ணீரை அழைப்பது போல் உன் தேகம் கண்டு என் காதல் வரவில்லை
காற்றிருந்தும் சுவாசிக்கத் தவிக்கிறேன் என்னை எறித்திடும் எண்ணையாய் நீ என்னில் தெளித்திடும் மொழிகளால்
எத்தனை காதல் நீ கண்டிருந்தாலும் இத்தனைக் காதல் கொண்டதில்லை நீ சித்தனாய் என்னை வாழச்சொல்லிப் போகிறாய்!
போ! விழிகள் மூடி உன்னை வழியனுப்புகிறேன் திறந்திருந்தால் கண்ணீரில் என்னுருவம் காணாமல் போய்விடும் என்பதால் போ!
கருத்துகள்
கருத்துரையிடுக