மாண்புமிகு ரமழான்

கண்ணியமிக்க ரமழானே ரம்மியமான சாந்தி மிக்க இரவுகளை உயிர்ப்பித்து அருள் மழையை சுவைக்க ஆவலுடன் தயாராகுவோம் ஒன்றுக்கு பத்தென்று பல மடங்கு நன்மைகள் குவிக்க வாய்ப்பு தரும் மாதம் ஈகை குணமும் இரக்க குணமும் மலர்ந்த மாண்பு மிக்க மாதம் வையகம் வியந்து வாகை சூடும் குர்ஆன் இறங்கிய மாதம் ஆன்மீக ஞானமெல்லாம் உயரும் மாதம்

பார்போற்றும் பத்ர் யுத்தம் நடந்த மாதம் தீயவனை வீழ்த்தி வெற்றி பெற்ற மாதம் கெட்ட ஷைத்தானை ஓட ஓட விரட்டும் மாதம் ஆரம்பிக்கும் பத்திலே ரஹ்மத்தை அள்ளி தந்த மாதம் இரண்டாம் பத்தில் பாவமன்னிப்பும் மூன்றாம் பத்தில் நரக கதவுகளை மூடிடும் மாதம் இரவுத் தொழுகைகளால் உயிர்ப்பித்து நன்மைகளை அள்ளி தரும் மாதம்

நோன்பாளிக்கு இருவகை மகிழ்ச்சி ஒன்று நோன்ப திறக்கும் நேரம் இரண்டாவது அல்லாஹ்வை சந்திக்கும் நேரம் நோன்பின் மாண்புக்கு எல்லையே இல்லை பசி எனும் கொடுமை பணக்காரன் அறிய வல்லோன் வகுத்தளிக்க மாதம் அமல்களின் பக்கம் எம் எண்ணங்களை திருப்தி ஷைத்தானியத்தை முறியடிப்போம்

Mumthaj - Yoosuff Akurana

கருத்துகள்