மாற்றம் வேண்டும் மாற்ற வேண்டும் நாட்டு கலவரம் தீர நிலவரம் மாற நாடே மாற வேண்டும்
சட்டத்தின் ஓட்டைகள் இறுக்கி அடைக்கப்பட வேண்டும் சகல மதமும் சமமெனும் மதசார்பின்மை மிளிர வரவேண்டும்
நீதி நியாயம் என்று ஒரு பாடத்திட்டமும் அமுலில் வர வேண்டும் கல்வியமைச்சு அதை தன் கடமை என கொள்ள வேண்டும்
திருத்த முடியாத யாப்பு வேண்டும் அதில் மனித உரிமைக்கே முதன்மை வேண்டும்
இனம் மதம் என்று பிரிவினை புகுத்தும் கைகளில் விளங்கிட வேண்டும் ஒரு சட்டம்
சட்டத்தின் முன் சகலரும் சமம் எனும் கொள்கை காக்க நீதி குழையா நீதிமன்றங்கள் நிறுவ வேண்டும் நாட்டில் இனிதே
மனிதரெல்லாம் புனிதராய் மனிதம் கொண்டு மண்ணில் மலர வேண்டும் அகத்தில் உறுதி உணர வேண்டும் ஒன்றே நாடு என்றே உழைக்க வேண்டும் இன்றே
கருத்துகள்
கருத்துரையிடுக