இம்சிக்கும் இழிவு கழைந்து பெண் மகிமை பூண்டு
கசந்திடும் கேவலம் கழைந்து பெண் கல்வி பூண்டு
மாதுவெனப் பிறந்த சிசுவின் சுவாச நரம்புகளூடு நித்தம் மண்யாத்திரையாய் மரணம் வரை மறவாமல் பயணித்து மூச்சுத் திணறி மரிக்கச் செய்யும் வழக்கமாம் மண்ணுள் உயிருடன் புதைத்தலெனும் மானுடமற்ற மரபு கழைந்து பெண் பாதுகாப்பு பூண்டு
ஆண் அடிமைத்துவம் கழைந்து பெண் சுதந்திரம் பூண்டு
பெண்மையை சங்கையென முழங்கி தினம் தினம் புன்னகையுடன் அவள் வலம் வந்திட ஓங்கி முழங்கிய முரசொலியே இனிய மார்க்கம் இஸ்லாம்.
ஈருலக வெற்றியின் முகவராம் இம் மார்க்கம் இனிதே வேண்டுவது கொள்கையில் உறுதி கண்ட நெஞ்சில் வீரம் கொண்ட நடத்தையில் ஒழுக்கம் பூண்ட மின்மினி தேசத்தின் மகாராணியாம் ஈமானிய மங்கையவளைத் தான்.
கருத்துகள்
கருத்துரையிடுக