முயற்சி

வெற்றிக் கனியை பறித்திட விதையாக விழுந்தவர்கள் பலர் முட்டி மோதி முயற்சித்து கனியை சுவைத்தவர்கள் சிலர்

முயற்சியில் தோற்று புதைந்து போனவர்கள் பலர் முயற்சிப்பவர்கள் தோற்கலாம் முயற்சிகள் தோற்பதில்லை

ஒவ்வொரு தோல்வியின் பின்னாலும் ஒழிந்திருக்கிறது ஓயாத ஒரு இதயத்தின் முயற்சி

ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும் துணை நிற்கின்றன துவளாத மனங்கள் வெற்றியும் தோல்வியும் முயற்சியின் விளைவுகளே!

Rushdha Faris South Eastern University of Sri Lanka.

கருத்துகள்