ஓ மானிடனே கோரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் மனித உள்ளங்களை நொருங்கி விடாமல் இறைசிந்தனையின் பக்கம் நெருங்குங்கள்
உன்னத படைப்பான மனிதனை ஒட்டினால் உயிர் வாழும் நீ மனிதனை ஒட்டாண்டி யாக்கி உயிரைக் காவு கொள்கிறாய்
கண்ணுக்குப் புலப்படாத நீ கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டுகிறாய்
வைரஸ் என்ற பெயரில் வைரலாய் விஷ்வரூபம் எடுத்து மானிட வர்க்கத்தை மண்டியிடச் செய்கிறாய்
தனியாக வந்த நீ துணையாக மனிதனையும் சேர்த்தல்லவோ தனிமைப்படுத்தி பார்க்கிறாய்
பூதக்கண்ணாடியில் தெரியும் ஓர் உயிரி அழித்துக் கொண்டிருக்கிறது இறைவன் லவ்பூல் மஹ்பூலில் அன்றே எழுதிவிட்டான் அதுவே இப்போது நடந்து கொண்டிருக்கிறது
மனிதா துவண்டுவிடாதே உன் இருதயத்தை தூசு தட்டி குப்பைகளை தூர எறிந்து விடு இறை அன்பை விட்டு தூரமாகிவிடாதே
இறை நியதியை வெல்ல இனி யாரும் பிறக்கப்போவதில்லை உள்ளத்தில் உறுதி கொள் இறுதி வரை
ஒட்டி உறவாடிய உறவுகளை வெட்டி விட்டு எட்டி நில் என்று கூறுமளவு வைரசான நீ வலம் வந்து கொண்டிருக்கிறாய்
உன் கோரத் தாண்டவம் என்று முடியுமோ விடியலை நோக்கி ஆவலுடன் மனிதன்
கருத்துகள்
கருத்துரையிடுக