எங்கேயோ பார்த்த முகங்கள் மங்கா சிரிப்பலைகளுடன், விதி வரைந்த கோலத்தில் விதி விலக்கா? நாமென்ன?
விடை பெற்று போகின்றோம் விடியலைக் காணவேண்டி, விடை பெற்று போனவர்கள் தொலைதூரம் போயிருப்பர் தொடர்பில்லை ஒருவருக்கொருவர்
ஓய்ந்து போன சிரிப்பலைகள் ஓயா கேலிப் பேச்சுக்கள் நிறுத்தவில்லை நினைவுகள் நினைவூட்ட நிழற்படமாகிப் போன நிகழ்வுகளை
நட்பு என்னும் பெயர் கொண்டு தொலைந்து போயினர் என் வானில் நட்சத்திர நண்பர்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக