ஷஃரு ரமழான்

சத்திய மார்க்கமிது சத்தியவானின் மாதமிது ஷஃரு ரமழானது

முப்பது நாட்களது முதற்பத்தில் இறையருளைப் பெற்றே நடுப்பத்தில் பாவக்கறை அகற்றி இறுதிப்பத்தில் சுடும் வேதனை அளிக்கும் நரக விடுதலை பெற்றிடு!

இறுதிப்பத்தின் ஒற்றை இரவினிலே இருளகற்றி அருளளித்து இரு ஐநூறு திங்கள்கள் இறை தியானம் செய்திட்ட இறை கூலியை பெற்றுத்தரும் இறையருள் லைலத்துல்கத்ரிலே இறைவனை நின்று வணங்கி இரு ஐநூறு திங்கள்கள் இறைவனை நினைவுகூர்ந்த இறையருளைப் பெற்றிடு!

ஒரு மாதம் பயிற்சி பெற்றே பதினொரு மாதம் சீர்திருத்தியே இறையச்சத்தை ஏற்படுத்தி இறை சன்னிதானத்தில் ஈடேற்றத்தைப் பெற்றிடு

Banucaseem

கருத்துகள்