தஃவாக் களமதிலே தடம்பதிக்கும்- நாமின்று தடை கண்டு-அஞ்சாது தடுமாறிச் செல்லாது
தயாளனின் உதவியுடன் தயக்கங்கள் ஏதுமின்றி துணிந்திடுவோம்! முனைந்திடுவோம்! தீனதனைச் சொல்லிடவே!
பல்லினத்தவர் மத்தியிலே பரந்து வாழும் நாமின்று பண்பாடுகள் கைக்கொண்டு பண்பாய் நாம் வாழ்ந்திட்டால் வென்றிடலாம் இதயமதை இஸ்லாமிய தீனின்பால்!
மொழியறிவு நாம் கற்று மௌட்டீக சிந்தனையும்-நாம் ஒழித்து மதச்சகிப்புத் தன்மையும் மனிதாபிமான உணர்வுகளும் மானிடர் எம் மனங்களிலே மங்காது மலர்ந்திட்டால் மாற்றாரும் இணைந்திடுவர் மணங்கமழும் தீனதிலே!
கடமையதை நாம் உணர்ந்து கச்சிதமாய் நேரமதை திட்டமுடன் வகுத்திட்டால் அடைந்திடலாம் வெற்றியதை இறைபாதை வழியதிலே!
இலக்குகள் நாம் கொண்டு இலட்சியம் அடைந்திடவே கூட்டாய் நாம் பயணிப்போம்! மாற்றங்கள் உருவாகும்.
இன்ஷா அல்லாஹ்
கருத்துகள்
கருத்துரையிடுக