என் இறைவா!

சோதனைகள் பல என்னைத் தொடர்ந்தாலும் நோவினைகள் பல என்னில் குடி கொண்டாலும் என்றும் என்னுடன் நீ இருப்பதை உணர்ந்து கொள்கிறேன் என் இறைவா!

விதியுடன் வாழ்வை இணைக்கின்றாய் நீ, வெறும் மதியோடு விளையாடி ஜெய்கின்றாய்

என் பிஞ்சு உள்ளத்தை பார்க்கின்றாய் நீ, அங்கு நடப்பதை கண்டு சிரிக்கின்றாய்

ஆவலுடன் உன்னை நாடுகின்றேன் என் இறைவா! என் ஆசைகளை என்றும் பொருந்திக் கொள்ள வேண்டும் நீ.

துவக்கமும் முடிவும் என் இறைவனுக்காக என்ற எண்ணத்தில் நிலைகொண்ட என்னை, அன்புடனே ஏற்றுக்கொள்.

இறைவா என்றும் நான் உன்னிடத்தில்.

Aakila M H A SEUSL

கருத்துகள்