என் கண்களின் இமைகளுக்குள்.

செல்கின்றேன் பயணம் அது நான் மட்டும் தனியாக அமைதியை தேடி நகர்கின்றேன், இரைச்சலின்றி அழகாய் ஓடும் நதியருகே, யாரோ எனக்காய் கட்டுவித்தது போலும் குடிசை ஒன்று.

முடிவு செய்தேன், என்னிருப்பிடம் இதுவென, அடைந்தேன் ஒரு ஆறுதல் இளம் காற்று என்னைத் தழுவுகையிலே.

சட்டென்று திமிர்த்துப் போனேன், இறையோனின் அருள் போல, சமாதானத்துக்காயும் எனக்காயும் என் தோளில் ஒரு வெண்புறா,

என்னை யாரும் அழைக்க வேண்டாம். நான் என் இருப்பிடம் அடைந்து விட்டேன். எனக்கோர் சேதி சொல்வதெனில், என் தூதுப் பறவையிடம் அனுப்பிடுங்கள். பதில் இல்லாத இந்தப் பாவையிடம்.

நிந்தவூர் றிசாமா SEUSL.

கருத்துகள்