என் கால்கள் போடும் நடனமிது

நடைப்பயணமாகவே நீண்ட தூரம் வெகு நாளாக செல்கிறேன்.

பேரிரைச்சல் இல்லா கடலலையை தேடி அலைகிறேன் கால் நனைக்க.

அதோ அங்கே! கறுத்த முகத்தோடு பார்க்கவே பயங்கரமாக கடலலை தொட்டு விட்டு செல்லும் ஈரலிப்பான உடலோடு கரும்பாறை எனக்காக காத்திருக்கிறது.

என் நடமாட்டத்தை சுருக்கிக் விட்டேன். என் இருப்பிடத்தை அடைந்து விட்டேன். என் பயணத்தின் எல்லையை வரையறை செய்து விட்டேன்.

புத்தகங்களோடு தன்னந்தனியே தனித்தீவில் ஒதுங்குகிறேன்.

எனைத் தேடுபவர் யாராவது இருந்தால் காகிதத்தில் எழுதி கடலலையிடம் கொடுத்து விடட்டும்.

என்னிடம் வந்தடையமல் போன சேதியில் இதுவும் ஒன்றாக இருக்கும்.

மருதமுனை நிஜா 
Follow us Twitter

கருத்துகள்