மனதின் வலிகள்

நெருடல்கள் பலவகை நெருக்கமாய் இறுக்கமாய் நெருஞ்சி முள்ளாய் நொருக்கி விடுகிறது நொந்து போன மனதை!

விதியென்ற நாமம் மட்டுமே கதியென்று கிடப்பது சதியென்ற சாத்தானுக்கு பதி வைத்தது போலாகி விடும்!

அனைத்தையும் அற்பமென அறிந்தும் - ஆழ் மனதை அனல் ஆழ்கிறது. ஆனாலும் படைத்தவன் அவனினால் மட்டுமே ஆறுதல் கொண்டு அமைதி கொள்கிறது!

Aroosiya Ilyas Digana , Kandy
Like us on Facebook மனதின் வலிகள்

கருத்துகள்