நிர்வாணமாய் வெள்ளை மாளிகை

உலகமே அமைதியாய் மெல்ல மெல்ல மீளச்சுழல இன்னுமொரு உயிர் கதரக் கதர பிரிகின்றது மானிடத்தில். உயிர் வாழும் உரிமை மறுக்கப்பட்டு.

வெள்ளையனின் கறுப்புப் பாதணி கறுப்பனின் தலைமீது நசுக்க வெள்ளை மாளிகையின் கோமணம் அவிழ்ந்து உயிருடன் இழந்து நின்றது நிர்வாணமாய்.

மானிடமெங்கும் மனித உயிர்களை கொன்று குவித்து புனித நகரங்களை போர்க்களமாக்கி போலியாய் மனிதாபிமானம் என்ற பெயரில் லீலிக் கண்ணீர் விட்டு வளங்களை சுரண்டி சூரையாடிடும் வல்லரசுக்கு வந்ததோ சோதனைகள்

பரிதாபமாக மக்கள் கொடிய நோய் கொரனாவால் நொடி நொடியாய் செத்து மடிய பெறுமை பேசுகின்றார் ஆணவத்தில் பொருளாதாரம் பூச்சியமாகி மருந்தின்றி, உணவின்றி சனம் திண்டாட விண்வெளி பூச்சாண்டி. தன்நாட்டு மக்களே உடமைகளை எரித்து உரிமைக்காக போராடும் கொடுமை. உயிர் வாழத்தானே

நாச்சியாதீவு எம். சஹ்ரின் அஹமட்
Like us Facebook 

கருத்துகள்