சமூகத்தின் கண்

பெண்ணே சமூகத்தின் கண் நீ விண்ணிலிருந்து விழும் மழைத்துளி போல் மண்ணுக்கே வளம் சேர்க்கும் பொன்மகள் நீ ஆணையும் ஆண்மையுள்ளவனாய் மாற்றும் ஆளுமையும் நீ

பாலகர்களை பயிற்றுவிக்கும் பள்ளிக்கூடம் நீ பெண்ணோடு ஆணையும் சுமக்கும் தாய்மையும் நீ

களைப்புற்று வந்த கண்மணி நபியையும் களை நீக்கி தெளியச் செய்தார் கருணை மிகு கதீஜா சீமாட்டி

பொருளேற்றி பொருளிறக்கி பொருளீட்டி இஸ்லாத்திற்கு வளமூட்டினார் ஈமானில் முந்திய முதற் பெண்

ஆணுக்கும் அறிவூட்டினார் ஆளுமை மிக்க ஆயிஷா பிராட்டி பெண்ணுக்கே பெருமை சேர்த்தார் சுவனத்துத் தலைவி பாத்திமா

பாகப்பிரிவினையில் பாதகம் செய்யவில்லை இஸ்லாம் மஹர் மூலம் மேன்மைப்படுத்திய மகத்தான மார்க்கம் இஸ்லாம்

சொத்தாக பங்கு பிரித்த உன்னை சொத்துக்கு சொந்தக்காரியாக மாற்றிய முத்தான மார்க்கம் இஸ்லாம்

ஆணுக்கு கட்டுப்படுவது சிறுமையல்ல ஆணின் விலாவிலிருந்து உதித்த நீ ஆணுக்கு துணைநிற்பதே பெருமை

பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் மகளாய் உடன்பிறப்புகளுக்கு உற்றசகோதரியாய் கணவனுக்கு ஆடையாய் உறவுகளுக்கு உத்தமியாய் மொத்தத்தில் சமூகத்திற்கே சேவகியாய் சாதனைப் பெண்ணாய் மிளிர்ந்திடு

Farisa Asadh SEUSL.

கருத்துகள்