வறுமை

வறுமையின் கொடுமை வாழ்க்கையின் தஞ்சம் விதி செய்த சதியோ வீணாய் மடிகின்றனர்

குடிதனை காத்திடும் - நாளைய குழந்தைப் பாலகன்கள் குலவிளக்கு அணைந்து குனிந்து நிற்கும் நிலை

பாலகன்களும் தினம் பசிக்கொடுமை தாங்க பட்சிகளும் ஊணின்றியே பாலகனை உணவாக்க பரிதவிக்கும் காலமிது

தாங்கிட முடியா சுமைகளும் வாங்கிட முடியாக் கடனும் வழி என்னவென்று அறியா விளிபிதுங்கும் மானிடரும்

அடுக்கடுக்காய் குழந்தைகள் அலையலையாய் தவிக்குதே அரசு நாடுகளும் அமைதியாய் இருக்குதே அகதியர் நிலை அறிந்தும்

உறவுகள் நிலை அறியாமலே ஊர் சுற்றி அலைகின்றனர் விதவை வாழ்விற்கு உதவிடாமல் வீணாய் கரைக்கிறனர் ஏனோ

கருணை கண்ணுடையோர் கலைஞர்களை உருவாக்க கணக்கின்றியே உதவிட கடமைபுரியனுமே நிதம்

Masiyya Binthi Asadh

கருத்துகள்