பா எழுத்தில் பழங்கவியொன்று பாட பல புத்தகம் படித்தேன் சிரமம் பாரது
பலரிடம் ஆலோசனை பல கேட்டேன் பாடவுள்ள கவி பற்றி
பத்து மாதம் சுமந்து பல வலிகளுடன் பாச தாயின் பிரசவம் போல பண்பான கவிதைகளை பாரில் பிரசவித்தேன் பழைமையுடன் வாழ்கையில்
பல வருடங்கள் கடக்க பாரில் மாற்றங்கள் நடக்க பா எழுத்தில் பாவின கவிதை எழுத பாரில் நேர மின்றி பயணத்தில் பா எழுத்தை இணையத்தில் பதிவு செய்து பாடிய செயற்கை நுண்ணறிவு பழைய புதுக்கவிதை இது
பல ஆளுமைகளை பக்குவமாய் தம்வசப்படுத்தி பல சாதனை புரியுது பாரில் செயற்கை நுண்ணறிவு
பாரில் - நற் பண்புகள் இல்லாதவிடத்து படைக்கும் செயற்கையறிவும் பண்பின்றி வளர்ந்து படை எடுக்கும் பாரை அழிக்க
பாரை அழித்திடாது பண்புகள் வளர படைப்போம் பாரில் செயற்கை நுண்ணறிவை பல்கலைக்கழக மாணக்கரே
கருத்துகள்
கருத்துரையிடுக