அறிவு தேடி வந்த மாணவச் செல்வங்களே! அறிவூட்டி விடை பெறக் காத்திருக்கும் முதுசங்களே! இன்று ஓர் பொன்னான நாள் இக் கலையகத்தில் அறிவுப் பணியாற்றிய ஆசான்கள் விடை பெறும் தருணமிது முதன்முறையாய் உங்கள் அனைவரோடும் ஒன்று சேரும் தருணமிது
புதியோர் இணைய நம் முன்னோர் விடை பெறக் காத்திருக்கும் தருணமிது
குறிஞ்சி முல்லை மருத நிலங்கள் கடந்து அறிவுப் பணியாற்ற நானும் இனணந்தேன் உங்களோடு இக் கலையகத்தில் ஆசானாய்.
புதுமுகங்கள் பல மொழிகள் கலந்தது நம் கலையகம் இனங்கள் மதங்கள் கடந்தது நம் உறவு
எம் வழிகாட்டி ஆசான்களே! தன்னிடம் கற்கும் மாணவன் தன்னை விட உயரத்தில் திகழநீங்கள் ஆற்றிய பணி மகத்தானது!
அறிவுப் பணி என்றும் அறப்பணி அதுவோர் உன்னத பணி! நீங்கள் ஆற்றிய சேவை மங்காச் சேவை
நீர் ஆற்றிய சேவைக்கு தினம் கிட்டிட வேண்டும் நற்பாக்கியங்கள்
நம் முன்மாதிரிகளே! முழுமையாக விடைபெறாதீர்கள் எம்மை விட்டு உம் ஆலோசனைகள் அனுபவங்கள் மூலம் எமக்கு தினம் வழிகாட்டிட வேண்டும்.
அன்பார்ந்த மாணவர்களே! இளமைப் பருவம் அது கற்கும் பருவம் நாளைய தலைவர்கள் நீங்கள் தலை நிமிர்ந்து வாழ்ந்திட வேண்டும்
அறிவு தேடி வந்த இளமலர்களே! இளமைப் பருவம் அது பொன்னான தருணம் கேளிக்கைகளில் கழித்திடாதீர் காலத்தை தினம் ஏற்று பின்பற்றிட வேண்டும் ஆசான் கூற்றை
புது உறவுகளாய் இணைந்த எமக்கு தினம் நன்றாய் ஒத்துழைத்திடக்கூறி விடை பெறுகிறேன் நானும்!
நன்றி
மாத்தறை/ புனித மத்தேயு இரு மொழி பாடாசாலையில் ஆசிரியர்களின் பிரியாவிடை வைபவத்தில் பாடப்பட்ட கவிதை
Faslul Farisa Asadh
கருத்துகள்
கருத்துரையிடுக