ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் தினம் ஒக்டோபர் வாசம் வீசிடவே தொடர் தொடராய் பல தினங்கள் ஒலிக்குதே பற்பல நினைவாய்
நாளைய உலகின் சந்ததிகள் நற்பிரஜைகளாய் சிறந்திட நாட்டின் ஒளிவிளக்காய் மலர்ந்திட நாளும் உழைத்திடும் நல்உள்ளம்.
நல் ஆசிரியப் பணி அறப்பணி என்றே நல்லாசானாய் சேவை நல்கிடும் நல்லுள்ளங்களை போற்றிடும் தினம் நலமாய் உதித்திடும் ஆசிரியர் தினம்
ஆழமாய் வழிகாட்டி ஆதி முதல் அந்தம் வரை அத்தனையும் சொல்லிக் கொடுத்து அன்பையும் பண்பையும் ஒன்றுசேர எம்முள் புகுத்தி ஒன்றாய் உன்னதமாய் வாழ்ந்திட ஒளியூட்டும் விளக்குகள் ஆசான்கள்.
போற்றுவோம் தினம் ஆசான்களை போற்றும் நாளில் மட்டுமன்றி தினம் தினம் மதித்தே வாழ்வோம் நிதம் நிதம் வாழ்த்துப் பெற்றிட
Masiyya Asad
கருத்துகள்
கருத்துரையிடுக