இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள், கவிதை, Safa Milhar, Youth Ceyln


எழுந்திரு இளைஞனே!
எதிர்காலம் உன் கையில்
நாட்டின் விடியல் உன் கனவில்
கல்வி விளக்கேந்தி
ஒழுக்கம் கவசமாக
நேர்மை பாதையில்
நடந்திடு தோழா!

சோம்பலை உடைத்தெறி
சவாலை ஏற்றிடு
போதை, பிரிவினை மறந்திடு
தாய் நாட்டின் கண்ணீரை
துடைக்கும் கரம்
உன்னுடைய இளைய சக்தியே!

இன்று நீ விதைக்கும் உழைப்பு
நாளை நாட்டின் வளமாகும்
ஆம் - இன்றைய இளைஞர்களே!
நாளைய தலைவர்கள் நீங்களே!

Safa Milhar

கருத்துகள்