قال الإمام ابن القيم -رحمه الله-:
إذا أردت أن تعرف قيمة العبد وقدره، فانظر إلى محبوبه ومراده.
( روضة المحبين ( ٢٠١
இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: ஒரு அடியானின் பெறுமதியையும் கண்ணியத்தையும் தெரிந்துகொள்ள நீ விரும்பினால் அவனுடைய சினேகிதனையும் அவனுடைய நோக்கத்தையும் பார். (நூல்: ரவ்ழதுல் முஹிப்பீன், பக்கம்: 201)
قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:
فمــن تاب أشبـه أبــاه آدم، ومن أصر واحتج بالقدر أشبه إبل
( مجموع الفتاوى ١٠٧-١٠٨/ ٨)
அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: யார் பாவமீள்ச்சி பெறுகிறானோ அவன் தனது தந்தை ஆதமை போல ஆகிவிடுவான், யார் (செய்த பாவத்தில்) விடாப்பிடியாக இருந்து விதியை கொண்டு வாக்குவாதம் செய்கின்றானோ அவன் இப்லீஸை (ஷைதானை) போல ஆகிவிடுவான். (நூல்: மஜ்மூவுல் ஃபதாவா, பாகம்: 08, பக்கம்: 107, 108)
قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:
والذين قدموا محبة المال الذي كنزوه، والمخلوق الذي اتبعوه، على محبة الله ورسوله، كان فيهم من الظلم والشرك بحسب ذلك.
( الإيمان ص٦٣)
அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் நேசத்தை விட சேமித்து வைத்த பணம், பின்பற்றிய படைப்பு போன்றவற்றின் நேசத்தை முற்படுத்தியவர்களிடம் அதற்கு ஏற்ப அநியாயமும் இணைவைப்பும் உண்டாகும். (நூல்: அல் ஈமான், பக்கம்: 63)
قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:
من نوى الخير وعمل منه مقدوره وعجز عن إكماله كان له أجر عامل 》
[مجموع الفتاوى (٢٢ /٢٤٣)]
அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: நலவு செய்ய (மனதில்) எண்ணி, அதில் இயலுமானதை செய்து, பூரணப்படுத்த இயலாமல் யார் இருக்கின்றாரோ அவருக்கு (பூரணமாக) செய்தவரின் கூலி கிடைக்கும். (நூல்: மஜ்மூவுல் ஃபதாவா, பாகம்: 22, பக்கம்: 243)
قال شيخ الإسلام ابن تيمية-رحمه الله-:
و النداء الخفي أعظم في الأدب لأن الأصوات لا تُرفع عند الملوك.
( مجموع الفتاوى (١٦/١٥)
அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: சத்தமின்றி அழைப்பது (பிரார்த்தனை செய்வது) ஒழுக்கத்தில் மிக மகத்துவமானதாகும், ஏனெனில் அரசர்களிடமும் சத்தங்கள் உயர்த்தப்படுவதில்லை. (நூல்: மஜ்மூவுல் ஃபதாவா, பாகம்: 15, பக்கம்: 16)
قال الإمام ابن القيم -رحمه الله-:
فكل عمل صالح ظاهر أو باطن فمنشؤه الصدق، وكل عمل فاسد ظاهر أو باطن فمنشؤه الكذب.
( الفوائد (ص: 198)
இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: வெளிரங்க மற்றும் உள்ரங்க அனைத்து நல்ல செயற்பாட்டின் வளர்விடம் உண்மை ஆகும், வெளிரங்க மற்றும் உள்ரங்க அனைத்து கெட்ட செயற்பாட்டின் வளர்விடம் பொய் ஆகும். (நூல்: அல் ஃபவாயித், பக்கம்: 198)
قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:
درجة الحلم والصبر على الأذى والعفو عن الظلم أفضل أخلاق أهل الدنيا والآخرة يبلغ الرجل بها ما لا يبلغه بالصيام والقيام.
( الصارم المسلول (234)
அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: நிதானம், நோவினையில் பொறுமையாக இருத்தல், அநியாயத்தை மன்னித்தல் போன்றன இவ்வுலக மற்றும் மறு உலகத்தாரின் பண்புகளில் மிகச்சிறந்ததாகும், (பகலில்) நோன்பு நோற்று (இரவில்) நின்று வணங்கி அடைய முடியாதவற்றை அவற்றின் மூலம் ஒரு மனிதன் அடைந்து விடுவான். (அஸ்ஸாரிமுல் மஸ்லூல், பக்கம்: 234)
قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله- :
إِتِّباع الهَوى بعد ظهور الحَقِّ بَغيٌ .
[ جواب الاعتراضات المصرية (ص٨٩ )]
அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: சத்திய கொள்கை விளங்கிய பிறகு மனோஇச்சையை பின்பற்றுவது அநியாயமாகும் (வரம்பு மீறலாகும்). (நூல்: ஜவாபுலிஃதிராளாதில் மிஸ்ரிய்யா, பக்கம்: 89)
قال شيخ الإسلام ابن تيمية -رحمه الله-:
لو كان كل ما اختلف مسلمان في شيء تهاجرا، لم يبق بين المسلمين عصمة ولا أخوة.
( مجموع الفتاوى (٢٨/١٧٣)
அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: ஒரு விடயத்தில் இரு முஸ்லிம்கள் கருத்துவேறுபாடு படுவார்களேயானால் முஸ்லிம்களிடத்தில் பாதுகாப்போ, சகோதரத்துவமோ எஞ்சாது. (நூல்: மஜ்மூவுல் ஃபதாவா, பாகம்: 28, பக்கம்: 173)
قال الإمام ابن القيم -رحمه الله-:
متى رأيت القلب قد ترحّل عنه حُبّ الله والاستعداد للقائه وحلّ فيه حُبّ المخلوق والرضا بالحياة الدنيا والطمأنينة بها فاعلم أنه قد خُسِف به.
( بدائع الفوائد (٣/ ٢٢٤)
இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: அல்லாஹ்வை நேசிப்பதும், (மறுமையில்) அவனை சந்திக்க தயாராகுவதும் உள்ளத்தை விட்டு விலகி, அதில் படைப்பினத்தின் நேசமும், உலக வாழ்வின் பொறுத்தமும், அமைதியும் இறங்கிவிட்டதை நீ கண்டால் அதிலிருந்து (உள்ளதிலிருந்து நன்மைகள்) உரிந்தெடுக்கப்பட்டுவிட்டது என்று அறிந்துகொள். (நூல்: பதாயிவுல் ஃபவாயித், பாகம்: 03, பக்கம்: 224)
கருத்துகள்
கருத்துரையிடுக