இனியும் தாமதம் வேண்டாம் ஏமாற்றி உழைத்தவற்றை திருப்பிக் கொடுக்கவும்
நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்த்தப்பட்டோரிடம் மண்டியிடவும்
பொய் ஓப்பனையைத் தோலுரித்து விடவும் முள்ளாகக் குத்திய வார்த்தைகளுக்கு மருந்தாகிடவும்
இழைத்த அநீதிகளுக்கு நீதி வழங்கிடவும் பதுக்கிய செல்வங்களுக்கு விடுதலை கொடுத்திடவும்
வீணாக்கிய காலங்களுக்காய் வருந்தியழுதிடவும் இனியும் தாமதம் வேண்டாம்
உத்தமராக வாழாவிட்டாலும் பரவாயில்லை பாவியாக மரணித்து விடாதிருப்போம் மூச்சு சிறைப்பட்டுப்போகும் நொடி யாரறிவர் ஆதலால் இனியும் தாமதம் வேண்டாம்
கருத்துகள்
கருத்துரையிடுக