அல்குர்ஆனின் வாசம் அகிலமெங்கும் வீசும் அல்லாஹ்வின் பாசம் அளவில்லாத நேசம் அழுது தொழுது பேசும்
அழகிய ரமழானே நீ வருக என் தேசம்
பசியிலே கழியும் பகற்பொழுதுகள் இறைவணக்கத்தில் கழியும் இராப் பொழுதுகள் இதயத்தில் இல்லை வீண் பழுதுகள் இவை யாவும் சுவனத்திற்கான வைர விழுதுகள்
பண்ணிய பாவமெல்லாம் பறந்தோட புண்ணியம் அருளாக நிறைந்தாட சைத்தானியம் விலங்குகளுக்குள் மறைந்தோட ஈமானியம் இதயமெங்கும் இலைந்தோட
அழகிய ரமழானே நீ வருக என் தேசம்
கருத்துகள்
கருத்துரையிடுக