உலகம் உயிர் பெற மங்கையர் மறுபிறப்பெடுக்கும் மகத்தான மணித்துளிகள்
தாரத்தை தாயெனப் போற்றும் தருணம்
பெண்மையின் பூரணத்தை பூமி போற்றும் பொன்னான நிமிடம்
புது உயிர் இதழ் விரிக்கும் இரம்மியமான பாெழுது
உறவுகள் ஒன்றுபட ஓர் உயிர் உதவி செய்யும் உன்னதமான கனங்கள்
தாய்மையின் ஸ்பரிசத்தை பெண் அவள் உணரும் உணர்ச்சிகரமான நேரம்
ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாய் மாறும் மாண்பான பொழுது
உலகில் உதித்த ஒவ்வொரு உயிரும் நினைவு கூறும் என்றும் மாறா அக்கனத்தை
அழுது கொண்டே பிறக்கும் தன் மகவை அத்தனை வலிகளையும் மறந்து தாயவள் சிரித்துக்கொண்டே நோக்கும் ஆச்சரியமான அற்புதமான தருணமது
தன்னுயிர் கொடுத்து புது உயிர் பெற்று வலிகளை வென்று பெண்ணவள் சரித்திரம் படைக்கிறாள் தரணியிலே அக்கணமே பிரசவம்!
கருத்துகள்
கருத்துரையிடுக