படகொன்று கவிழ்ந்ததே

படகொன்று கவிழ்ந்ததே பரிதாபம் நிறைந்ததே அழகான உயிர்கள் சேர்ந்து அல்லாஹ் அழைப்புக்குள் நுழைந்ததே

தண்ணீரும் தவித்ததே கண்ணீரும் கொதித்ததே விடிகாலைப் பொழுதும் அன்று இடியாக இடித்ததே

செவியுற்றோர் இதயமெல்லாம் இரும்பாகக் கனத்ததே பிஞ்சுயிர்கள் கண்மறைந்தே நெஞ்சமெல்லாம் துயர் நிறைந்ததே

தன்உறவு தொலைத்த சொந்தங்கள் சோகத்தில் நிலைத்ததே உலகத்தின் நிலையாமை காட்சிகளாய் நிலைத்ததே

தாயன்பின் அடையாளம் மரணத்திலும் வழுத்ததே இதயத்தின் திசுக்களெல்லாம் ஓயாமல் வலித்ததே

விழியிரண்டில் கண்ணீரும் கடலெனவே வழிந்ததே

இறைவிதியை ஏற்பதற்கு பலம் கேட்டு மனம் பிரார்த்தனை புரியுதே இன்னுயிர் நீத்த உறவுகளுக்காய் சுவனத்தை கேட்டிங்கே கரங்களெல்லாம் உயருதே

மக்கொனையூராள்

கருத்துகள்