செம்மை அதரமதில் செம்மணம் கமழுதடி! செந்நீரால் சமஞ்சவளே செந்தழலாய் ஒன் வதனமடி!
செக்கச் செவந்த பாதமதை செந்தேனமுதில் தொட்டமிழ்த்தி செம்மீன் ஒன்ன செதுக்கி வைப்பேன் செம்மேனி முழுதும் செம்மணி வைத்தே!
சேற்றை எடுத்து சேர்த்து வச்சி சேயிழை ஒன்ன செவ்வை செய்வேன் செங்கதிர் வந்து பார்க்கும் முன்னே செம்பஞ்சு கொண்டு ஒன்ன மறச்சி வைப்பேன்!
சென்மம் தீர சேவை செஞ்சி சேலை உடுக்க ஒனக்கு சோலை செய்வேன்.. சாயம் பூசிய சந்தனச் சேக்கை சிற்பம் நீ உறங்க நான் செஞ்சி வைப்பேன்!
செங்குங்கும தடாகமதில் செவ்வே ஒன்ன குளிக்க வைப்பேன் சிகை முழுதும் சூடிக் கொள்ள சொர்க்கம் சென்று பூப்பறிப்பேன்!
செம்மண் நிறத்து பேரழகே சொக்கிப் போகுது சிந்தையடி சிதறி நானும் சாகும் முன்னே செம்பனி மலரே ஏத்துக்கடி!
கருத்துகள்
கருத்துரையிடுக