''ஆ.... பஹீமா... வா ... வா... '' ஷரீபதாத்தாவின் முகத்தில் புன்னகைப் பூக்கள் மலர்ந்தன.
''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்... எந்தேன் செய்தீக?'' பஹீமா கேட்டுக்கொண்டே உள்ளே சென்றாள்.
''அல்ஹம்துலில்லாஹ்... நாங்க நல்லம்.... நீங்க இப்டி திடீரென்டு வந்தீச்சி நம்பேலா....''
''நான் வார தானே இனி....'' சிரித்துக் கொண்டே சமாளித்தவளை,
''போதும்... நீ கடசியா சிப்னாட கலியாணத்துக்கே வந்த.... அது நடந்தே ரெண்டு வரிஷமும் ஆகீட்ட....'' பெருமூச்சுடன் கூறியவளின் கைகளைப் பற்றிக் கொண்டவள்,
''சரி....சரி... அத உடுங்கோ.... எங்கேன் சிப்னா?''
''அவள் உள்ளுக்கு தான் எந்தியோ யோசிச்சிகொண்டீச்சிய....''
''நீங்க கவல பட வேணம்.... எல்லம் நலவுக்கு தான் பாருங்கோ... இன்னும் அதே யோசிச்சிகொண்டீந்தா எந்தேன் அர்த்தம்? நல்ல எடமொன்டீச்சி... அத பத்தி பேசதான்....''
''பஹீமதாத்தா... போதும் இந்த கதய நிப்பாட்டுங்கோ...'' அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சிப்னாவின் குரல் கடுகடுத்தது. சற்று அதிர்ந்த பார்வையை அவள் மேல் வீசி விட்டு,
''இங்க பாரு புள்ள.... ஒனக்கில்லாட்டீம் உம்மாக்காக சரி....''
''போதும்.... போதும்... இப்டி பேசி பேசி தான் மொதயும் நீங்களுக என்ன ஏமாத்தின.... இப்போம் அப்டியே.... வேணம் உடுங்கோ...'' அவள் அழ ஆரம்பித்திருந்தாள்.
''அடி... போதும் அவள்ட இன்னும் பேசவேணம் வா....'' ஷரீபதாத்தா, பஹீமாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
சிப்னாவால் கவலையை அடக்க முடியாமல் தனியாக அழுது தீர்த்துக் கொண்டிருந்தாள்.
.......................................
''தாத்தா... ஒன்ன எப்பேகன் அவரு பாக்க வாரன்ட? '' பரீனா செல்லமாகக் கேட்டாள்.
''தெரியாவே! வாப்பாட்ட தான் கேக்கோணும்...''
''அது சரி... வாப்பாவேன் பாக்க வார! லூசு பெய்த்து கேளு... அப்ப தானே ஒன்ன ஜாயாக ரெடியாக்கி அனுப்பேலும்'' பற்கள் வெளியே தெரியும்படி சிரித்தவளைப் பார்த்து,
''ஒனக்கு வேற வேல ஒன்டுமில்லயா? எப்ப பாரு இதயே பத்தி பேசகொண்டு... போ.... பெய்தது படி..''
பர்ஹா கோபமாகக் கூறினாலும் அவளுள்ளம் கலக்கம் அடைந்துகொண்டிருந்தது.
''பர்ஹா... பர்ஹா....'' சித்தியும்மா அழைத்தார்.
''வாரன் உம்மா....''
தொடரும். M.R.F Rifdha…..
கருத்துகள்
கருத்துரையிடுக