கல்வி கற்க வயது தடையில்லை
இமாம் அல்-கிஸாயீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் 40 வயது வரும் வரை, ஆட்டிடையனாகவே இருந்தார். ஒரு நாள், ஒரு தாய் அல் குர்ஆனை மனனம் செய்ய, தனது மகனை வகுப்புக்குச் செல்லும்படி, வலுக்கட்டாயப் படுத்திய சமயத்தில், மகனோ அதற்கு விரும்பவில்லை!
அவள் தன் மகனை நோக்கி, பாட வகுப்புக்குச் சென்று படித்துக் கொள், எதிர்காலத்தில் இந்த ஆட்டிடையன் போன்று மாறிவிடாதே எனக் கூறினாள்.
அப்போது இதனைக்கேட்ட, இமாம் அல்-கிஸாயீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் "நான் அறியாமைக்கு உதாரணப் காட்டப்படுபவனாக மாறிவிடுவேனோ?" எனக் கூறி, தனது ஆடுகளை விற்று, படிக்க ஆரம்பித்தார். அதற்கு பிறகு, அவர் அரபு மொழியிலும், குர்ஆனிய "கிராத்" கலையிலும் இமாமாக மாறியது மாத்திரமல்ல, அறிவிற்கும், பெரும் வீரியம், வைராக்கியத்திற்கும் உதாரணம் காட்டப்படுபவராக மாறிவிட்டார். (நூல்: அல் ஜவாஹிரு வத்துரரு
كان الإمام الكسائي رحمه الله راعياً للغنم حتى بلغ 40 عاماً،
وفي يوم من الأيام وهو يسير رأى أمّاً تحث ابنها على الذهاب إلى الحلقة لحفظ القرآن، والولد لا يريد الذهاب
فقالت لابنها : يا بني اذهب إلى الحلقة لتتعلم، حتى إذا كبرت لا تكون مثل هذا الراعي !!.
فقال الكسائى : "أنا يضرب بي المثل في الجهل؟!!" . فذهب، فباع غنماته، وانطلق إلى التعلم وتحصيله، فأصبح :
- إماماً في اللغة - إماما في القراءات - ويضرب به المثل في العلم وكبر الهمة
الجواهر والدرر - لابن حجر.
எக்காரியத்தினால், எப்போது இறைவன் எம்மை பொருந்திக் கொள்வான் என்பது எமக்கு புரியாத புதிராகவே உள்ளது. எனவே எப்போதும் நாம் செய்கின்ற காரியங்கள் மனத்தூய்மை மிக்கதாக அமைய வேண்டும்! இதுபோன்ற தகவல்களை படித்துவிட்டு உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! இறைவன் எம்மை பொருந்திக்கொள்ள, போதுமானவன்.
அப்துல் வாஜித் ஐய்யூப் இன்ஆமீ
கருத்துகள்
கருத்துரையிடுக