சுமைகளை தாக்கியதால் என்னவோ சுமைதாங்கி என்று மகுடம் சூட்டி விட்டனர்!
கடந்து சென்ற எல்லோரும் என்னில் அமர்ந்து சென்றனர். நடந்து செல்லும் பாதையில் இளைப்பாற நான் இருக்கை ஆனேன்.
பல நேரங்களில் பிரசவ அறையாக மாரி மழலை மடியில் சுமந்தேன்
காலங்கள் கடந்தன என்னை எல்லோரும் மறந்து சென்றனர் இறந்தவர் நினைவுகள் நிலைத்திருக்க அவர்களை சுமந்த என் நினைவுகள் அழிந்து போனது ஏனோ!
சுமைகளை தாக்கினாலும் தலைநிமிர்ந்து நின்ற நான் இன்று படிக்கல்லாக பலர் வீட்டில் - மிதிப்பட்டுக் கொண்டிருக்கின்றேன் ஏனோ!
நடைமுறை மாற்றதால் நடைமுறையில் இருந்து ஒதுக்கப்படேன் நானோ!
A. Sudharshini
கருத்துகள்
கருத்துரையிடுக