வாழைமரம்

காற்றடித்து கிழிந்த வாழை இலை கதறி அழும் ஓசை கேட்டாயோ!

காவல்காரன் இல்லாத விசேசவீடுகளில் காவலுக்கு கதவோரம் உயிர்துரந்து நிற்பதை அறிவாயோ!

திருவிழா நேரத்தில் தெருவீதி எங்கும் தன் சந்ததிவிட்டு பிரிந்திருப்பதை பார்த்தாயோ!

வானம் சிந்தும் மழைநீரை பிச்சை வாங்கி நான் என் சந்ததி வளர்த்திடையில் வாழை அடி வாழையாக வாழ வேண்டும் என்று என் வாழ்வை பறித்த கதை கேலாயோ!

ஒரு முறை பிரசவித்த பின் தாய்மையை இழந்தாய் என என்னை என் சந்ததி விட்டு பிரித்திடுகையில் என் உயிர் துடித்திடும் வேதனை சிந்திப்பாயோ!

நான் சிந்தும் கண்ணீர் உன் மீது சிந்தினால் வாழகறை என கூறும் உன் உள்ளம் நான் கதறி அழும் என் கண்ணீரை துடைக்காதது ஏனடா அற்ப மானிடா?

A. Sudharshini
Monetize your website traffic with yX Media Monetize your website traffic with yX Media yX Media - Monetize your website traffic with us

கருத்துகள்