என்ன சொல்லி நானெழுத...!

கவியரங்கில் கவிமழை பொழிய வந்தேன் நானும் தலைப்போ புதுமை சுவைத்தால் இனிமை என்ன சொல்லி நானெழுத...!

வல்ல நாயன் நாமம் கூறி வள்ளல் நபி மீது ஸலவாத் ஓதி வீற்றிருக்கும் கவி உறவுகளுக்கு வீரமுகமன் உரைத்து கால் வைக்கிறேன் கவிதைக்குள் என்ன சொல்லி நானெழுத...!

இயற்கை எனும் இறைவிரிப்பில் இறை படைப்புக்கள் இறை அற்புதம் என்ன சொல்லி நானெழுத...!

மரங்கள் பேசும் மலைகள் கேட்கும் தென்றல் வீசும் தேன்கவி ஊற்றும் இயற்கை சொல்லும் என்ன சொல்லி நானெழுத...!

நிலா வெளிச்சமும் நீரோடையின் பாய்ச்சலும் மலர்களின் வாசம் மன மகிழ்வின் நேசம் இயற்கை சொல்லும் என்ன சொல்லி நானெழுத...!

தருக்களின் நிழலும் தாரகையின் ஒளியும் முல்லையின் எழிலில் முகிலும் சூழும் இயற்கை சொல்லும் என்ன சொல்லி நானெழுத...!

பூக்களின் அழகில் பூமியும் வாசம் பூஞ்சோலையின் வனப்பில் பூதரமும் அணைப்பில் இயற்கை சொல்லும் என்ன சொல்லி நானெழுத...!

வல்லோன் படைத்தான் நல்லோன் உணர்வான் மாந்தருக்கு படிப்பினை கவிஞருக்கு ஒப்பனை இயற்கை சொல்லும் என்ன சொல்லி நானெழுத...!

அஸ்மா மஸாஹிம் பாணந்துறை

கருத்துகள்