பாணந்துறை கவிதா வட்டத்தின் (பாகவம்) பதினைந்தாம் கவியரங்கு பொருளாளர் ஓய்வு நிலை அதிபர் எஸ்.எச்.எம். நௌபல் அவர்களின் தலைமையில் அவரது இல்லத்தில் இன்று 25-01-2025 ஆந் திகதி இனிதே இடம்பெற்றது.
'என்ன சொல்லி நானெழுத?' எனும் தலைப்பில் இயற்கை எழில், சமூகம், அரசியல், இயற்கை அனர்த்தம், சுய சரிதை, தேசம், சர்வதேசம் எனப் பல கருப்பொருட்களை மையமாகக் கொண்டு கவிதைகள் அரங்கேற்றப்பட்டன.
இக்கவியரங்கில் தலைவர் கலைமதி யாஸீன் ஆசிரியர், செயலாளர் கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ் ஆசிரியர், பொருளாளர் நௌபல் ஆசிரியர் உட்பட அங்கத்தவர்களான நளீம், இம்தியாஸ், கவிஞை மஸீதா அன்ஸார் ஆசிரியை, அஸ்மா மஸாஹிம், செல்வி ரிஹ்லா ஆகியோர் கவி பாடி கவியரங்கை மெருகூட்டினார்கள்.
மேலும் அஹதிய்யா சம்மேளன தேசிய தலைவர் அஸ்வர் ஹாஜியார், ஊடகவியலாளர் சத்தார் ஆகியோரும் கவியரங்கில் கலந்து சிறப்பித்தனர்.
இப்னு அஸாத்
கருத்துகள்
கருத்துரையிடுக